விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
இப்படத்தையடுத்து ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘ஆண்டவன் கட்டளை’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது. இப்படத்தை அன்பு செழியன் தயாரிக்க இருக்கிறார்.
மணிகண்டன் ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருக்கிறது. பாடல்களே இல்லாத இப்படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: