இசையோடு சம்பந்தப்பட்ட வார்த்தையை தனது பெயரோடு வைத்திருக்கும் வாரிசு நடிகையின் பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும், இவர் அறிமுகமானது பாலிவுட் சினிமாவில்தான். இருந்தாலும், பாலிவுட் சினிமா இவரை கைவிடவில்லை.
பல வருடங்களாக பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்களை, இவர் பின்னுக்கு தள்ளி முன்னணி நடிகைகள் வரிசையில் முன்னால் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். அங்கு கிடைத்த வரவேற்பையடுத்து, தமிழ், தெலுங்கு உலகிலும் தற்போது இவருக்கு மார்க்கெட் எகிறியுள்ளது.
இதனால், இவர் சமீபத்தில் எங்கு சென்றாலும், இவரை பார்ப்பதற்காக பெரிய ரசிகர் பட்டாளமே கூடிவிடுகிறதாம். ஒருசில நேரங்களில் சிலரின் தொல்லைகளிலும் இவர் மாட்டி விடுகிறாராம். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்போது இவரை சுற்றி ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கியுள்ளாராம். இவர் இப்போது படப்பிடிப்பு, கடை திறப்பு விழா என எங்கு சென்றாலும், இந்த பாதுகாப்பு படை அவரை சுற்றியே வலம் வருகிறதாம்.
Post A Comment: