இயக்குனர் தெரியும், அது என்ன இசையமைப்பாள இயக்குனர் என்கிறீர்களா, இசையும் அமைத்து படத்தையும் இயக்கினால் அவரை எப்படி அழைப்பது, அதுதான் இசையமைப்பாள இயக்குனர். 'கண்கள் இரண்டால்...' என்ற ஹிட் பாடலைக் கொடுத்து காதுகளைக் கட்டிப் போட்டவர் அந்த இசையமைப்பாளர்.
அவருடைய மாணவரான அந்த தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்தான் அவரை தன்னுடைய படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார்.
என்னதான் மாணவருக்கு ஆசிரியராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஆசிரியருக்கு வாய்ப்பு கொடுப்பதையும் மாணவர் நிறுத்திவிட்டார். அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இசையமைப்பாளராக மட்டுமே இருக்க முடியாது என்ற முடிவெடுத்தவர், ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டார். ஒரு தயாரிப்பாளரையும் தேடிப் பிடித்துள்ளார்.
இரண்டு கோடி ரூபாயில் படத்தை முடித்துத் தருகிறேன் என்று சொன்னவர் கடைசியில் 7 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டைக் கொண்டு போய்விட்டாராம்.
இத்தனைக்கும் படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்தான். அந்தப் படத்திற்கு எப்படி 7 கோடி ரூபாய் என்பது அந்த வசந்தமான இசையைமப்பாள இயக்குனருக்குத்தான் வெளிச்சம். வேறு தொழில் செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சினிமாவில் சம்பாதிக்கலாம் என்று திரையுலகத்திற்கு வந்து, இருப்பதையும் தொலைத்து விட்டு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
வானவில்லைப் பார்த்து வாழ்க்கை என்று நினைத்த தயாரிப்பாளர், அந்த வானவில் சிறிது நேரத்தில் மறைந்துவிடும் என்பதை மறந்து விட்டார் போலும்.
சினிமாவை வாழ்க்கையாக நம்பி பட்டினி கிடக்கும் கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்கள் தங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கிப் போயிருக்கிறார்களாம்.
Post A Comment: