Propellerads
Navigation

கற்பாறையிலிருந்து தவறி விழுந்து உத்தியோகத்தர் பலி; பதுளையில் சம்பவம்

பதுளை, நமுனுகுல மாதுளாவத்த தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வெளிக்கள உத்தியோகஸ்தரான செல்லையா சந்திரசேகரன் (வயது 55) என்பவர், கற்பாறையிலிருந்து தவறி விழுந்து, நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படித் தோட்டத்தில் சிலர் அனுமதியின்றி தேயிலை பறித்துக்கொண்டிருப்பதை அறிந்து, அவர்களை பிடிபதற்காகச் சென்றபோதே, இவர் கற்பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: