லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான திகில் படமான 'டோரா' மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்திலும் திருப்தியான வசூலை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்னையில் கவண் திரைப்படம் இரண்டாவது வார இறுதியில் 18 திரையரங்குகளில் 216 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.72,23,940 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதி வரை சென்னையில் 2,79,66,220 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.
அதேபோல் நயன்தாராவின் 'டோரா' திரைப்படம் இரண்டாவது வார இறுதியில் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களில் 103 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.20,37,660 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 9ஆம் தேதி வரை சென்னையில் ரூ.1,35,31,290 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...



Post A Comment: