விஷாலின் உடன் பிறந்த தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா தற்போது விஷாலுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க கடந்த நவம்பர் மாதத்தில் இவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்துவிட்ட நிலையில், நேற்று திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்து முடிந்துள்ளது.
இந்த விழாவில் விஷால் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதத்தில் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்கு நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...



Post A Comment: