பொகவந்தலாவை, கெக்கஸ்வோல்ட் தோட்டத்தில் ஆற்றை அகழப்படுத்தும் போது மீட்கப்பட்ட மாணிக்கக்கல் இல்லத்தை (மாணிக்கக்கல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தும் மண்), தேசிய மாணிக்கக்கல் அதிகாரசபை, ஏலத்தில்விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மழை காலத்தில், கெக்கஸ்வோல்ட் ஆறு பெறுக்கெடுப்பதை கருத்திற்கொண்ட ஹம்பகமுவ பிரதேச சபை, அதனை அகலப்படுத்தும் நடவடிக்கையில், திங்கட்கிழமை ஈடுபட்டது.
ஆற்றை அகலப்படுத்தும்போது, மாணிக்கக்கல் இல்லம் இருப்பது கண்டறியப்பட்டதுடன், பின்னர் அவை பைகளில் இடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
எனினும், பிரதேச மக்கள் மற்றும் மாணிக்கக்கல் வியாபாரிகள், குறித்த மாணிக்கக்கல் இல்லத்தை கொண்டுச் செல்ல முற்படுவதாக, பொகவந்தலாவை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து உடனடியாக குறித்தப் பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், தேசிய மாணிக்கக்கல் அதிகாரசபை அதிகரிகளுக்கும் மாணிக்கக்கல் இல்லம் ஒப்படைக்கப்பட்டது
இவ்வாறு தேசிய மாணிக்கல் அதிகாரசபை அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்ட மாணிக்கக்கல் இல்லம், பொகவந்தலாவை நகரில் இன்று மாலை ஏலத்தில்விடப்படவுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: