Propellerads
Navigation

விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன் 'விஜய்61' படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய் 61' படத்தை அனைவரும் எதிர்பார்த்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அட்லி இயக்குகிறார். இதுகுறித்த 8 வினாடி வீடியோ ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் திரைக்கதை இன்று இறுதி செய்யப்பட்டுவிட்டதால் இன்றைய தினம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளீயாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    Official Announcement: Script locked today! #Thalapathy61 @actorvijay @Atlee_dir pic.twitter.com/RISDRLCrKz
    — Sri Thenandal Films (@ThenandalFilms) November 17, 2016
Share
Banner

Post A Comment: