Propellerads
Navigation

ரஜினி-சச்சின் சந்திப்பு நடக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் 'காலா கரிகாலன்' படப்பிடிப்பில் உள்ளார். இந்த படப்பிடிப்பு மும்பையில் சுமார் 40 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கர், ரஜினிகாந்த் அவர்களை தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி கடந்த வாரம் வெளியான 'சச்சின் ஏ பில்லியம் ட்ரீம்ஸ்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சச்சின் படம் வெளிவருவதற்கு முன்பே அந்த படம் வெற்றி பெற டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், சச்சினின் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நேருக்கும் நேர் சந்திக்கும் அந்த வினாடியை இந்திய ஊடகங்கள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
Share
Banner

Post A Comment: