தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் இந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு மும்பையை சேர்ந்த மனிஷ் ஷா அவர்களின் 'கோல்ட் மைன் டெலி பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகை சினிமா வட்டாரத்தில் பலரை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பெருந்தொகை என்று கூறப்படுகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் ‘விவேகம்’ ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

Post A Comment: