Propellerads

About

Navigation
Recent News

'சச்சின் ஆந்த்தம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இசையுலக ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முதலில் இணைந்துள்ள 'சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது.

ஆம், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சச்சின் ஆந்த்தம்' (Sachin Anthem) என்ற பாடலை நாளை சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து வெளியிடவுள்ளனர். 

கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கரின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் நாளை வெளியானவுடன் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
Share
Banner

Post A Comment: