Propellerads
Navigation

ரஜினியை நக்மா சந்தித்ததில் அரசியல் இல்லையாம்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ள நக்மா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

நடிகர் ரஜினியை அரசியலுக்குள் இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருகின்றன. தமிழகத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் ரஜியை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தமிழகத்தில் வலுவாக காலூன்றலாம் என தேசிய கட்சிகள் நினைக்கின்றன.

ஆகவே, தேசிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அவ்வப்போது ரஜினியை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால், ரஜினியோ அரசியல் பக்கம் வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
Share
Banner

Post A Comment: