Propellerads

About

Navigation
Recent News

மோடி - பிரியங்கா சோப்ரா ஜெர்மனியில் சந்திப்பு

இளையதளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் பொலிவுட், ஹொலிவுட் என பிரபலம் அடைந்த நடிகை பிரியங்கா சோப்ரா, இந்திய பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்துள்ளார்.
 
ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இந்திய பிரதமரை பெர்லின் நகரில் மரியாதை நிமித்தமாக பிரியங்கா சோப்ரா சந்தித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் தனக்காக நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய அவர், தற்செயலாக நடந்த இந்த சந்திப்பு தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, “பே வாட்ச்” திரைப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: