ஸ்ரீதேவி தற்போது நடித்து வரும் படம் `மாம்'. இந்தியில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.
அ மேட் பிலிம்ஸ் & தர்ட் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்கும் `மாம்' படம் ரிலீசாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரவி உத்யவார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அக்ஷய் கண்ணா, நவாசுதின் சித்திக்கி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் `எ மைடி ஹார்ட்' என்ற ஹாலிவுட் படத்தில், ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்த அத்னன் சித்திகி இப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்துள்ளார்.
இதில் அத்னனின் தேர்வுக்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து படக்குழு கூறுகையில், "ஜான்விக்கு அத்னனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் நடித்த `மைட்டி ஹார்ட்' படம் ஒரு காரணம். அத்னன் சித்திகியை இந்தப் படத்தின் தேர்வுக்கு வர சம்மதிக்க வைத்தனர். பிறகு போனிகபூர் உடனடியாக அத்னனின் குழுவிடம் பேசி அவரைப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்” என்றனர்.

Post A Comment: