Propellerads
Navigation

ரஜினியின் ஜோடி அப்படிப்பட்டவரா? பாலிவுட்டில் பக்... பக்...

ரஜினியின் புதிய படம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். இந்தி பட உலகில் இவர் பற்றி பல்வேறு புரளிகள் கிளம்பி உள்ளன.

இந்தி நடிகர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹீமா குரோஷிக்கும் தொடர்பு இருப்பதாக முதலில் பேசப்பட்டது. 
 
பின்னர் நடிகர் சல்மான்கானின் தம்பி சொஹைல் கானுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சில மாதங்களாக பேசப்படுகிறது. ஹீமாவின் இந்த தொடர்பால் சொஹைல் கானுக்கும் அவரது மனைவி சீமாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
ஆனால் இதை மறுத்துள்ள ஹீமோ, “சொஹைலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் எனக்கு சகோதரர் போன்றவர். என்னால் அவருடைய வீட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி கூறிய சொஹைல், “எனக்கும் ஹீமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஏதாவது இருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த சல்மான்கான் பிறந்தநாள் விழாவுக்கு ஹீமா சென்றார். ஆனால் அவரை சல்மான்கான் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஹீமா குரோஷி பற்றிய வதந்தி இந்தி திரை உலகில் சூடு பிடித்திருக்கிறது.
Share
Banner

Post A Comment: