Propellerads
Navigation

எல்லா புகழும் ரஹ்மானுக்கே!கீரவானி நெகிழ்ச்சி

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தவர் எம்.எம்.கீரவானி என்றால் அது மிகையாகாது.

இருப்பினும் இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன் என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதில் கூறிய எம்.எம்.கீரவானி, 'இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும், அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான எம்.எம்.கீரவானி, அவர் வழியை பின்பற்றுவதாக கூறுவது அவர், ரஹ்மான் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
Share
Banner

Post A Comment: