அஜித் மற்றும் விஜய்யின் அடுத்த படங்கள் குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 62' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வேறொரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
இதேபோல் அஜித்தின் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்தும் சில தகவல்கள் பரபரப்புடன் வெளிவந்துள்ளது.
இதேபோல் அஜித்தின் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்தும் சில தகவல்கள் பரபரப்புடன் வெளிவந்துள்ளது.
'தல 58' படத்தையும் இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், 'விவேகம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் நாயகி நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் மேலே கண்ட இந்த தகவல்கள் மிக வேகமாக பரவி வந்தாலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.
சமூக வலைத்தளங்களில் மேலே கண்ட இந்த தகவல்கள் மிக வேகமாக பரவி வந்தாலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.
Post A Comment: