Propellerads

About

Navigation
Recent News

‘இமைக்கா நொடிகள்’

‘கணிதன்’ படத்திற்கு பிறகு அதர்வா கால்ஷீட் டைரியில் பத்ரி வெங்கடேஷின் ‘செம போத ஆகாதே’, ராஜமோகனின் ‘ருக்குமணி வண்டி வருது’, பர்னேஷின் ‘ஒத்தைக்கு ஒத்த’, ஓடம் இளவரசின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, அஜய் ஞானமுத்துவின் ‘இமைக்கா நொடிகள்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர கைவசம் ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கவுள்ள புதிய படம் உள்ளது. இதில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக வேலை செய்து சினிமா பயின்றவராம். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். முக்கிய வேடமொன்றில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அனுராக் காஷ்யப்பிற்கு ‘ருத்ரா’ எனும் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரமாம். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார், புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘கேமியோ பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. எமோஷனல் சஸ்பென்ஸ் த்ரில்லராக ரெடியாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு ‘இமைக்கா நொடிகள்’ டீமால் ட்விட்டப்பட்டு, ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டியுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. விரைவில் ஆடியோ & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: