இதுவரை இசையமைப்பாளராக ஹாலிவுட் வரை சென்ற ரகுமான் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றியும், தன்னுடைய இயக்கம் பற்றியும் ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார்.
“25 வருடங்களுக்கு முன்பு ரோஜா படத்தில் அறிமுகமாகும் போது எந்த உணர்வில் இருந்தேனோ, இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தினர் மட்டும்தான் ஆதரவாக இருந்தனர். ஆனால், இப்போது பலருடைய ஆதரவு இருக்கிறது.
இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி, படம் பற்றிய கருத்துக்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு புதிய டெக்னாலஜி, படத்தில் என்ன இருக்கிறது என்பதை விட இந்த வி.ஆர் டெக்னாலஜியை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
பாகுபலி 2 படம் பற்றிய கேள்விக்கு, “அப்படி பிரம்மாண்டமாகப் படமெடுக்க இங்கு பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். மேலும், என்னிடம் 200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை,” என பதிலளித்திருக்கிறார்.
ரகுமான் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள இந்தப் படம் முற்றிலும் ரோம் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.

Post A Comment: