பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் அண்மையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்கொலைக்கு முன்னர் கார்த்திக் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று எழுதி வைத்திருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் விருகம்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்ர்களுடைஅ சார்பில் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
நந்தினியின் முன் பிணை மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் எந்த நேரமும் நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன் பிணை மனு ஒன்றை தாக்க செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...
Post A Comment: