ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி குஜராத்தையும் வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் ஐதராபாத் அணி கூடுதல் பலத்துடன் குஜராத்தை எதிர்கொள்கிறது.
அந்த அணியில் யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ், கேப்டன் வார்னர், தவான் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கடந்த போட்டியில் மிகவும் நேர்த்தியாக பந்துவீசி ஐதராபாத் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. இதனால் அந்த அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராட வேண்டும்.
இந்த அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஜேசன்ராய், மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், வெய்ன் சுமித், கேப்டன் ரெய்னா, தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.
183 ரன் குவித்தும் தோற்றதால் குஜராத் அணி பந்துவீச்சில் பலவீனப்பட்டு காணப்படுகிறது. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் ஜடேஜா, பிராவோ இல்லாததால் பந்துவீச்சு மோசமான நிலையில் இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் இதை சரிசெய்யும் வகையில் வீரர்களின் மாற்றம் இருக்கும். வெளிநாட்டு வீரர்களில் பல்க்னெருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது . இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இந்த மூன்று ஆட்டத்திலும் ஐதராபாத் அணியே வெற்றி பெற்று இருந்தது.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோற்று இருந்தது. தற்போது சொந்த மண்ணில் ஆடுவதால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், ரோஸ் பட்லர், அம்பதி ராயுடு, பொல்லார்ட், ஹார்த்திக் பாண்டியா, பும்ரா, டிம் சவுத்தி உள்ளனர். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணியில் இணைந்து உள்ளார்.
அந்த அணியின் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இல்லை. அதை சரி செய்ய மாற்றங்கள் இருக்கும்.
கொல்கத்தா தனது முதல் ஆட்டத்தில் (குஜராத்துக்கு எதிராக) 183 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் காம்பீர், கிறிஸ்லின், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன், போல்ட், கிறிஸ் வோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

Post A Comment: