விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர் என்று கூறப்படும் 'மதகஜராஜா' என்ற திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகிவிட்டதால் இந்த படத்தின் பிரச்சனைகளை பேசி முடித்து விரைவில் வெளியிட முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஷால் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பான 'நாளை நமதே' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்திலும் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தில் நகைச்சுவை கேரக்டரில் சதீஷ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அவர்களுடைய தேர்வு நடைபெற்று வருவதாகவும் சி.வி.குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விஷால் ஏற்கனவே 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: