‘அதே கண்கள்’ படத்தின் வெற்றிக்கு பிறகு 'மெட்ராஸ்' புகழ் கலையரசன் நடித்த ‘எய்தவன், உரு’ ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளது. இது தவிர கலையரசன் நடித்துள்ள 'காலக்கூத்து, சைனா, பட்டினப்பாக்கம்' படங்களின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது, ‘களவு’ என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் கலை.
இதில் ‘உரு’ படத்தை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கியுள்ளார். கலையரசனுக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும், மைம் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சாருக்கு ரெடியாகவுள்ளதாம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தும், பர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் வெளியிட்டனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில், இன்று படக்குழு ட்விட்டிய டிரையிலரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. படத்தை தமிழகமெங்கும் வருகிற மே 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘உரு’ டீம். இதே நாளில், ஜீவாவின் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ஜெயம் ரவியின் ‘வனமகன்’, விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ ஆகிய படங்களும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: