சமீபத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25ஆம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் அடையாள போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: