Propellerads
Navigation

'பவர்பாண்டி' இரண்டாவது வார வசூல்

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'பவர்பாண்டி' படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வசூலும் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் சென்னையில் இந்த படம் 19 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.53,86,080 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் குடும்பத்துடன் கூடிய பார்வையாளர்கள் 85% நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த 14ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை ரூ.1,44,25,810 சென்னையில் மட்டும் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: