Propellerads
Navigation

முடிவுக்கு வந்தது 'சர்வர் சுந்தரம்' படப்பிடிப்பு

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவுக்கு புரமோஷன் ஆகி வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சந்தானம் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மகாபலிபுரத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி, உள்பட பலர் நடித்து வந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

சென்னை, கோவா, துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ள இந்த படம் சந்தானம் படங்களின் பெரிய பட்ஜெட் படமாக கருதப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் செஃப் ஆக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: