Propellerads
Navigation

புரமோஷனுக்கு வர மறுக்கும் ரெஜினா


எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டலின், ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சரவணன் இருக்க பயமேன்'. 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பட வெற்றியை தொடர்ந்து எழில் இயக்கியுள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சூரி உடன் இணைந்து படம் முழுக்க காமெடியில் கலக்கி இருக்கிறாராம் உதயநிதி. ரெஜினா கதாநாயகியாக நடிக்க இன்னொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார். டி.இமான் இசை அமைக்க, ஒளிப்பதிவை கே.ஜிவெங்கடேஷ் கவனித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

எழிலும், உதயநிதி ஸ்டாலினும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படமும் காமெடி ஜானர் படமாக உருவாகியுள்ளதாம். இந்த படம் மே 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும்நிலையில் இப்படத்தை தணிக்கைக் குழுவினர் பார்வைக்கு அனுப்பப்பட்டது. சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு 'யு' சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியிருக்கிறார்கள்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் அடுத்த கட்டமாக படத்தின் புரமோஷனுக்கு வரும்படி ரெஜினாவை அழைத்துள்ளனர். தெலுங்குப்படங்களில் நடிப்பதாக சொல்லி டேட் இல்லை என வர மறுக்கிறாராம்.
Share
Banner

Post A Comment: