பாலிவுட்டின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி வினோத்கண்ணா சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட வினோத்கண்ணா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார்.
கடந்த 1968ஆம் ஆண்டு முதல் பாலிவுட்டில் நடித்து வரும் வினோத்கண்ணா, 'வாண்டட், டபாங், டபாங் 2,' ராமையா வஸ்தாவயா, பிளேயர்ஸ், தில்வாலே உள்பட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்ட வினோத்கண்ணா தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதஸ்பூர் தொகுதியின் எம்பியாகவும் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோத்கண்ணாவுக்கு கவிதா என்ற மனைவியும், ராகுல்கண்ணா, அக்சயாகண்ணா , சாக்சிகண்ணா ஆகிய மூன்று மகன்களும், ஷராதா கண்ணா என்ற மகளும் உள்ளனர்.
வினோத்கண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: