நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க சூர்யா உள்பட பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியில் துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், காதல் மன்னன் கேரக்டருக்கு துல்கர் சரியான தேர்வாக இருப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
1950கள் மற்றும் 60களில் தொடங்கி தொடர்ந்து முப்பது ஆண்டுகள் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும், அனைத்து முக்கிய கேரக்டர்களையும் ஏற்று நடித்தவர் சாவித்திரி.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இன்றைய தலைமுறையினர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் வலுவான திரைக்கதையுடன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது.
நாக் அஷ்வின் இந்த படத்தை இயக்கவுள்ளார். உலக மகளிர் தினமான கடந்த மார்ச் 7ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தகக்து.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
விடையளிக்க மறுப்பது கவலையளிக்கின்றது #UmaOya #Uva
Anonymous Jul 29 2017நோர்வூட் பகுதியில் விபத்து #Norwood #Accident
Anonymous Jul 29 2017ஹாலி-எல ரயில் தண்டவாளத்தில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு #Hali-Ela #Girl #Dead
Anonymous Jul 29 2017சிறையில் இருக்கும் பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம்?
Anonymous Jul 29 2017'தலைவன் இருக்கின்றான்' அரசியலில் களமிறங்கும் கமல்ஹாசன்
Anonymous Jul 29 2017
Click here to load more...
Post A Comment: