Propellerads
Navigation

'பாகுபலி அனுபவம் மீண்டும் பள்ளிக்கு அழைத்து சென்றது': பிரபாஸ்

2015 பாகுபலி திரைப்படம் வெளியான பின் மகேந்திர பாகுபலி கதாப்பாத்திரத்தில் நடித்த தன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் நடிகர் பிரபாஸ். இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி 2 வில் உயரமான மிக அழகான கதாநாயகன் பிரபாஸ், அமரேந்திர பாகுபலி என்ற தந்தை கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ள இத்திரைப்படம், மூன்று மொழிகளில் உலகம் முழுக்க சுமார் 8500 திரைகளில் வரும் ஏப்ரல் மாதம் 28 தேதி வெளியாகிறது. இந்தியாவில் உருவாகும் மொழிசார்ந்த படங்களின் தரத்தை இப்படம் தன்னுடைய மிகவும் அழுத்தமான ரசிக்க வைக்கும் கதையின் மூலம் மாற்றிக்காட்டியது. இப்படத்தை பற்றி நடிகர் பிரபாஸீடம் உரையாடியதின் மூலம் தன் வாழ்நாளில் 5 ஆண்டுகள் இப்படத்திற்காக ஏன் தியாகம் செய்தார் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரபாஸிடம் இயக்குநர் இக்கதை பற்றி கூறியப்போது, இது தான் அவருடைய வாழ்க்கையின் மிகமுக்கியமான தருனம் என்று புரிந்துக்கொண்டு, அப்படத்தை தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார். இப்படம் ஒப்புகொண்ட நாள் முதல் வேறு எந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவும் இல்லை, கதையும் கேட்கவில்லை. அவர் இயக்குநர் மீது வைத்திருந்த நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது உலகம் முழுக்க இப்படம் வெளியாகி ரசிகர்களில் வரவேற்ப்பை வாரி குவித்தப்போது தான். மிகவும் முக்கியமான இப்படத்தை பற்றி நாம் அவரிடம் கேட்டது, உங்கள் வாழ்க்கைப்பற்றி புத்தகம் எழுதினால் பாகுபலி என்ற அத்தியாயத்தின் கீழ் என்ன எழுதுவீர்கள் என்ற நாம் கேட்டப்போது சிறுது நேரம் யோசித்துவிட்டு பின்னர் பிரபாஸ் கூறியதாவது, “என் வாழ்க்கையை பற்றி அப்படி ஒரு புத்தகம் நான் எழுதினால், ஒரு அத்தியாயம் அல்ல அப்புத்தகத்தில் பாதி அல்லது குறைந்தது 30 சதவீதமாவது பாகுபலியை பற்றி இருக்கும், இப்பயணத்தை பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது என்பதால் நான் அதனை அவ்வளவு எழிதாக சொல்லிவிட இயலாது”, இயக்குநர் ராஜமெளலியின் கதைக்கேட்ட பின்னர் அப்படத்தின் கதைக்கு ஒருவிதமான மந்திர தன்மை உள்ளது என்பதை புரிந்துக்கொண்டார் பிரபாஸ். ஆனால் இப்படம் வட இந்திய தென்னிந்திய மாறுபட்ட சினிமா ரசனையை உடைத்தெரியும் என்று நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, அதற்கான முன் தயாரிப்பிலும் நான் ஈடுப்படவில்லை. “எனக்கு தெரியும் நாம் இப்போது பிரம்மாண்டமான திரைப்படங்கள் தான் நடித்து வருகிறோம் என்று ஆனால் மக்களிடம் கிடத்த வரவேற்பு இப்படத்தை மேலும் பிரம்மாண்டமாக்கியதை நான் உணர்ந்தேன், ஆனால் இயக்குநர் ராஜமெளலி இப்படத்தின் பிரம்மாண்டத்தை முன்க்கூட்டியே யூகித்திருக்கிறார், மக்களிடம் கிடத்தை வரவேற்ப்பை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை”.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே கதை என்றாலும் கூட அதனை ஒரே படமாக கூற இயலாது. இப்படம் நடிகர் பிரபாஸ் மீது ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியதா? இந்த இரு மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கும் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டதா? “ஆமாம், பாகுபலி திரைப்படம் படமாக்கும் போதே நாங்கள் அனைவரும் வளர்ந்துக்கொண்டே இருந்தோம், கிட்டத்தட்ட எங்கள் வாழ்நாளின் நான்கு பிறந்தநாளினை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினோம், ஆண்டுகள் செல்ல செல்ல மிகவும் பக்குவமடைந்தோம், இந்த பக்குவம் தான் என்னுடைய நடிப்பை மெருகேற்றி இந்த இரு கதாப்பத்திரத்தை புரியவைத்தது. ஒரு நல்ல நடிகனாகவும் நான் வளர்ந்தேன்.


பாகுபலி என்று யாராவது சொன்னாலே அனைவரின் முன்னிலையிலும் பாகுபலி சிவலிங்கத்தை தோல்களில் சுமந்து செல்லும் காட்சிதான் நியாபகத்திற்கு வரும். யாராலும் அவ்வளவு எழிதில் வெல்ல முடியாத இளவரசன் கதாப்பத்திரத்திற்காக நடிகர் பிரபாஸ் தானாகவே எடைப்போட்டு தன்னுடைய உடற்கட்டை முருக்கேற்றிக் கொண்டார், பாகுபலி 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்காட்சிகளுக்காகவும், அதில் குறிப்பாக இறுதி கட்ட காட்சியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட போர்காட்சியில் அசுரத்தனமான பல்லாலதேவனாக நடித்துள்ள ராணா டகுபதியுடன் இணைந்து நடிப்பதற்காக கிட்டத்தட்ட 120 நாட்கள் தன்னுடைய உடலை வருத்தி நடித்துள்ளார், எது உங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தது? “ஆமாம் இந்த நீண்ட போர்க்காட்சிகளை படமாக்கும்போது நிறைய சவாலான தருனங்கள் இருந்தது, ஆனால் என்னுடைய உடல் உழைப்பை விட, மனசார்ந்த உழைப்புதான் சவாலாக இருந்தது, நம் அனைவருக்கும் இப்படம் நன்றாக வரவேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு இயல்பாக நீண்டு செல்லும் பட்ஜெட்டும் எங்களுக்கு மிகப்பெரிய சவலாக இருந்தது, இப்படத்தில் அவரவர் ஒரு பொருப்பேற்றுக்கொண்டதால், மிகவும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தோம், காலையில் வேலை துவங்கும் போதும் மாலை வேலை முடியும் போதும், படப்பிடிப்பை திட்டமிட்டபோதும் நாங்கள் ஒரு ஒழுங்கு முறைய கடைப்பிடித்தோம், மிகவும் ரசித்து காதலித்து நம்முடைய வேலைகளை செய்தாலும் நாம் மீண்டும் பள்ளிக்கு சென்றது போல் ஒரு உணர்வு இருந்தது ” என்று கூறி புன்னகைக்கிறார்.
மகேந்திரா Vs அமரேந்திரா

பாகுபலி முதல் பாகத்தில் மகேந்திர பாகுபலியை திரையில் பார்த்துள்ளோம் தற்போது இரண்டாம் பாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான தைரியமனா அமரேந்திர பாகுபலி கான உள்ளோம். இந்த இரு கதாப்பத்திரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? “இப்படத்தில் வரும் தந்தை மகன் ஆகிய இரு கதாப்பாத்திரங்களுமே மனதளவிலும் உடலளிவிலும் மிகவும் வலிமை மிகுந்தவை, ஆனால் பல விஷயங்களில் இருவருக்கும் தனித்தன்மை உண்டு, இரண்டு பேரும் வேறுப்பட்ட சூழ்நிலைகளில் வளர்ந்துள்ளனர், இருவருக்கும் வேறு மாதிரியான சிந்தினைகள் உண்டு, மகேந்திர பாகுபலி என்பவர் ஒரு விதியின் குழந்தை, அவன் ஒரு இடிதாங்கியை போல, அவன் மின்சாரம் போன்று உடனே வினைப்புரிபவன், ஆனால் அமரேந்திர அனைத்தையும் தன் மனதுக்குள்ளே வைத்துக்கொள்ளுபவர்”.
நாம் இயக்குநர் ராஜமெளலியை பற்றி கூறும்போது அவர் கண்கள் விரிந்து அதிலிருந்து ஒரு மிரட்சி தென்ப்பட்டது “இயக்குநர் ராஜமெளலி என்னுடைய குரு, மிகச்சிறந்த இயக்குநர் மிகச்சிறந்த மனிதரும் கூட.”

அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கும் விடை தெரிவதற்காக. நடிகர் பிரபாஸுக்கு அவர் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய உச்சத்தை கொடுக்க தயாராக உள்ளது அவர் தியாகம் செய்த 5 வருட வாழ்க்கைகான முழு பாராட்டுகளும் கிடைக்க உள்ளது. இதுநாள் வரை பாகுபலி திரைப்பட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்துவிட்டு தற்போது படத்தின் முந்தைய பாகம் வெளியாக போவது எப்படி உள்ளது? “ மக்கள் இப்படத்தை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் பதற்றமாகதான் உள்ளது, ஆனால் அதை மீறி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது.” என்று கூறிவிட்டு சிரிக்கிறார்.

ஏப்ரல் 28 ம் தேதி படம் வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பெல்லாம் முடிந்த உடன் உங்களின் முதல் காரியம் என்ன? ” விடுமுறைக்கு சென்றுவிடுவேன் எங்கு என்று தெரியவில்லை அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கிறது.” தன் புன்னகை முத்திரையுடன் பேட்டியை முடித்துக்கொள்கிறார்.
Share
Banner

Post A Comment: