Propellerads
Navigation

'2.0' திரைப்பட ரகசியத்தை வெளியிட்ட எமி


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படம் பற்றிய தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியில் வரவில்லை. யாருக்கு என்ன கதாபாத்திரங்கள், படத்தின் கதை என்ன, கதைக் களம் என்ன என எந்த தகவலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

 'லீக்' ஆன ஒரு சில புகைப்படங்களை வைத்தும் எதுவும் சொல்ல முடியவில்லை. ரஜினிகாந்த் படத்தின் நாயகன் அக்ஷய்குமார்தான் என படத்தின் முதல் பார்வை வெளியீட்டின் போதே அறிவித்தார். அது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும், இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாவதாகச் சொல்லப்பட்ட நிலையில், படத்தை அடுத்த வருடத்திற்குத் தள்ளி வைத்ததும் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த ஏமாற்றமாக அமைந்தது.

படம் பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில் படத்தின் நாயகியான எமி ஜாக்சன் படத்தின் ஆடை வடிவமைப்பு பற்றிய ஒரு தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார்களாம். அங்கு அவர்களை 'மோல்ட்' எடுத்து அதன் பின் அதற்கேற்றபடி ஆடைகளை டிசைன் செய்தார்களாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான தோற்றத்தை இந்தப் படத்தில் ஷங்கர் உருவாக்கியிருக்கிறார் என்கிறார் எமி ஜாக்சன்.

ஏற்கெனவே, எமி ஜாக்சன் தாராளமாக நடிப்பவர் என்று பெயர் வாங்கியவர், '2.0' படத்தில் மேலும் தாராளமாக நடித்திருப்பார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
Share
Banner

Post A Comment: