இந்தியாவின் பிரமாண்ட திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களுக்காக சுமார் ஐந்து வருடங்கள் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது மீண்டும் பிரமாண்டமாக தயாராகி வரும் ஒரு மும்மொழி படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு 'சாஹூ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வித்தியாசமான பின்புலத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், வித்தியாசமான கதைகளத்தில் ஒரு புதிய வடிவத்தில் உருப்பெற்று பிரம்மாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும் காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறாது.
பாகுபலிக்கு பின்னர் பிரபாஸின் இமேஜ் இந்திய அளவில் உயர்ந்துள்ளதால் அவரது அடுத்த படத்தை பாகுபலியை விட அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் திருப்தியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில், வம்சி மற்றும் பிரமோத் அவர்களின் தயாரிப்பில், அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளில், சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் மதியின் ஒளிப்பதிவில், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
மேலும் இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி வெளியாகும் 'பாகுபலி 2' படத்துடன் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: