கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'முண்டாசுப்பட்டி' இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக முதன்முறையாக அமலாபால் நடிக்கவுள்ளார் என்ற செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு 'மின்மினி' என்ற டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஷ்ணு, அமலாபால், சுஜானே ஜார்ஜ், சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று விஷ்ணு அறிவித்துள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: