Propellerads

About

Navigation
Recent News

நடிகையிடம் அடி வாங்கி 5 நாள் அவதிப்பட்ட வடிவேல்

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இருந்த நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் காமெடி ட்ராக்கில் கவனம் செலுத்து வருகிறார். ராகவா லாரன்ஸின் சிவலிங்கா, விஜய்-அட்லீ படம் என தற்போது பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சிவலிங்கா பட ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி தற்போது வடிவேலு மனம் திறந்துள்ளார். ஹீரோயின் ரித்திகா சிங் நடிக்க வருவதற்கு முன் குத்துசண்டை வீராங்கனையாக இருந்தவர் என்பது முதலில் வடிவேலுவுக்கு தெரியாதாம்.

வடிவேலுவை ரித்திகா அடிப்பது போல ஒரு சீனை இயக்குனர் வாசு படமாக்கினாராம், அப்போது உண்மையிலேயே வடிவேலுவை அடித்துவிட்டாராம். அந்த வலி அடுத்த 5 நாட்களுக்கு இருந்ததாம்.
Share
Banner

Post A Comment: