இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்த பிரமாண்டமான திரைப்படமான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் ஓப்பனிங் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் இந்த படம் 'கபாலி', தெறி மற்றும் பைரவா படங்களை அடுத்து முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விளங்கியது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இந்த படம் ரூ.91,38,470 வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் தமிழக வசூல் ரூ.10.6 கோடி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சென்னையில் 0.91 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.2.55 கோடியும், கோவையில் ரூ.1.65 கோடியும் திருச்சி தஞ்சை பகுதியில் ரு.1.15 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது.
இந்த ஆண்டில் விஜய்யின் 'பைரவா' படத்தை அடுத்து அதிக வசூல் செய்த படம் மற்றும் தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் 10வது இடத்தையும் 'பாகுபலி 2' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: