பிரபல நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறியதாவது:
சமீபத்தில் நான் சமூக வலைத்தளம் ஒன்றில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்தேன். அந்த பதிவிற்கு நான் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு இருந்தது. அப்பொழுதுதான் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. இதன் பின்னர் பெண் கலைஞர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
பின்னர் இதுகுறித்து நான் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தேன். அவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளோம். அந்த அமைப்பின் பெயர்தான் 'சேவ் சக்தி' (Save Sakthi). இந்த அமைப்பின் மூலம் மாநில அரசிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்க உள்ளோம். முதலாவதாக பெண்களுக்கு நேரும் குற்றங்களை விசாரிக்க என்று தனி நீதிமன்றம் தேவை. இந்த நீதிமன்றத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரும் துன்பத்திற்கு எதிராக துணிந்து புகார் கொடுக்க வர முடியும். இரண்டாவது இந்த நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் நீதி கிடைக்க வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். அதேபோல் குற்றம் செய்யும் குற்றவாளிகளும் தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதை யோசித்து குற்றம் செய்ய தயங்குவார்கள்
மேலும் திரையுலகில் ஃபெப்சி என்ற அமைப்பும் அதற்கு கீழே ஒரு 24 அமைப்புகளும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு என ஒரு தனி அமைப்பு இல்லை. அந்த குறையை இந்த சேவ் சக்தி போக்கும். நடிகை மட்டுமின்றி துணை நடிகைகள், டான்சர்கள் என திரையுலகில் இருக்கும் அனனத்து பெண் கலைஞர்களுக்காகவும் இந்த சேவ் சக்தி உறுதுணையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: