Propellerads

About

Navigation
Recent News

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார். நடிகர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் உள்ள கருணாஸ், ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆதரவாளரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்த 122 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சொந்த தொகுதியான திருவாடனை தொகுதி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் கருணாஸ், இன்று திடீரென ரஜினியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து 'பாபா', எந்திரன் போன்ற படங்களில் கருணாஸ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Share
Banner

Post A Comment: