சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பா.ரஞ்சித், வரும் ஏப்ரல் 14 முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என்று சமீபத்தில் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து பின்னர் அது இயக்குனரால் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிப்பார் என்று கூறப்படுகிறது. நாங்கள் இயக்குனரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது இது வெறும் வந்தந்தி என்றும் படத்தின் நடிகை நடிகையர் மற்றும் தொழில் நுட்ப குழுவை பற்றிய அதிகாரபூர்வ அறிவுப்பு இன்னும் சில வாரங்களில் வெளிவரும் என்று தெரிவித்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினி-குஷ்பு நடித்த 'மன்னன்', 'அண்ணாமலை' மற்றும் 'பாண்டியன்' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: