Propellerads
Navigation

பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது. இதுகுறித்து பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர்களை கைது செய்தனர்.

எனினும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சுனில்குமார் தலைமறைவாக இருந்ததாவும், அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டது.,

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுனில் சற்று முன்  நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாகவும், நீதிமன்றத்திற்கு உள்ளே அவர் செல்லும் முன்பே அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுனில்குமாரிடம் விசாரணை செய்தால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இன்னும் யார் யார் இருக்கின்றார்கள் என்ற உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: