Propellerads
Navigation

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டிலா?

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'வேலைக்காரன்' என்ற டைட்டில் தான் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்வதை போல் சிவகார்த்திகேயனின் விக்கிபீடியா பக்கத்தில் இந்த டைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1987ஆம் ஆண்டு ரஜினிகாந்த், அமலா நடிப்பில் கே.பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி,.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

விக்கிபீடியா பக்கத்தில் பதிவு செய்திருப்பது உண்மையா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
முதல்முறையாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்து வருகிறார். 

மேலும் சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். 'ரெமோ' படத்தை தயாரித்த 24ஏம் ஸ்டுடியோஸ் இந்த படத்தையும் தயாரிக்கின்றது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது.
Share
Banner

Post A Comment: