காதல், செண்டிமென்ட், குத்துப்பாட்டு என பலதரப்பட்ட சூழல்களுக்கு பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் சினேகன். “யோகி” திரைப்படத்தில் நடிகராக உருவெடுத்த அவர், “உயர்திரு 420” திரைப்படத்தை அடுத்து, “பொம்மி வீரன்” திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் ஹொரர் கதையில் உருவாகி வருகிறது. மேலும், திரைப்படத்தில் நடித்து வந்த போதும் பாடல் எழுதுவதில் பிசியாக இருந்து வரும் சினேகன், தற்போது“ கடவுளுக்கு நன்றி”என்ற திரைப்படத்தில் ஒரு அம்மன் பாடல் எழுதியுள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசர், சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 24ஆம் திகதி வெ ளியிடப்படவுள்ளதுடன், டீசருடன் சினேகன் எழுதிய மாரியம்மன் பாடலும் வெளியிடப்பட உள்ளது.


Post A Comment: