ஒருபக்கம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பரபரப்பில் இருக்கும் நடிகர் விஷால் இன்னொரு பக்கம் படப்பிடிப்பிலும் பிசியாக உள்ளார். 'துப்பறிவாளன்' படத்தை அடுத்து அவர் 'இரும்புத்திரை' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு மங்காத்தா' போன்ற படம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.

Post A Comment: