Propellerads
Navigation

தல-தளபதி சந்திப்பு பிப்ரவரியில் நடக்குமா?

கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்காக கோலிவுட் திரையுலகினர் நடத்திய மெளன உண்ணாவிரத போராட்டத்தின்போது அஜித், விஜய் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாலும், விஜய் கலந்து கொள்ளாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று முதல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் தொடங்கவுள்ளது. அதேபோல் இதே பின்னி மில்லில் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வருவதாகவும் இவ்வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனவே ஒரே இடத்தில் தல, தளபதி படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இம்முறை இவர்களின் சம்பிரதாய சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: