தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டும், 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார். மேலும் விரைவில் அவர் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தில் 'பாகுபலி' வில்லன் ராணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
தற்போது ராணா இந்த படத்தில் நடித்தது குறித்து ஒரு வித்தியாசமான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தில் ராணாவின் காட்சி ஒரே ஒரு வினாடிதான் திரையில் தோன்றுகிறதாம். இந்த ஒரு காட்சிக்காக தான் 26 நிமிடங்களில் மட்டுமே நடித்ததாகவும் கூறியுள்ளார். ஒரே ஒரு வினாடி மட்டும் நடித்ததாக ராணா கூறும் தகவல் திரையுலக ரசிகர்களுக்கு புதுமையான செய்தியாக உள்ளது.

Post A Comment: