புதுடெல்லி: மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெருவாரியன வார்டுகளை பிடித்துள்ளது. பாஜகவிற்கு ஆதரவளித்த மராட்டிய சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தம் 227 வார்டுகளில் சிவசேனா: 84, பா.ஜ.க 80, காங்கிரஸ்: 31, தேசியவாத காங்கிரஸ்: 9, நவநிர்மாண் சேனா: 7, மற்றவை: 7 இதில் பாஜக பெருவாரியான வார்டுகளை பிடித்தது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மராட்டிய மாநிலத்தில் பாஜக என்றுமே வலுவான நிலையில் உள்ளதை உள்ளாட்சி முடிவுகள் காட்டுகிறது. பாஜக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த மராட்டிய சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Post A Comment: