Propellerads
Navigation

'சி 3' தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி

சூர்யா நடிப்பில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. 
ஆனால் இந்த படத்திற்கு திருட்டு டிவிடி மற்றும் திருட்டுத்தனமாக இணையதளத்தில் புதிய படங்களை ஒளிபரப்புவோர்களிடம் இருந்து வெளிப்படையான சவால் வந்துள்ளது என்பதையும், இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளரின் உணர்ச்சிவசப்பட்ட கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'சி 3' படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக கூறியுள்ளது.
Share
Banner

Post A Comment: