Propellerads
Navigation

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரும்பும் அஜித்தின் 'வரலாறு'

மூன்று வேடங்களில் தல அஜித் மற்றும் அசின் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம் 'வரலாறு. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அஜித்துக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.

இந்நிலையில் இந்த திரைப்படம் 11 வருடங்களுக்கு பின்னர் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தின் மூன்று வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் இந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரே தெலுங்கிலும் இயக்குவாரா? என்பது குறித்த தகவல் இப்போதைக்கு இல்லை. இருப்பினும் பரதநாட்டிய கலைஞர் உள்பட அஜித் நடித்த மூன்று கேரக்டர்களுக்கும் ஜூனியர் என்.டி.ஆர் சரியான தேர்வு என்றே கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: