பயமா எனக்கா... இல்லவே, இல்லை
நடிகை அருந்ததி நாயர்,அளித்த பொங்கல் ஸ்பெஷல் பேட்டி...
* 'சைத்தான்' வாய்ப்பு எப்படி வசமானது?
இந்த படத்தின் ஐஸ்வர்யா, ஜெயலட்சுமி என்ற இரட்டை கேரக்டர்களுக்கு 'ரவுண்ட் பேஸ்' ஹீரோயினை தேடிய, விஜய் ஆன்டனி என்னை தேர்வு செய்தார்.
* விஜய் ஆன்டனியின் நடிப்பு, இசை எது பிடிக்கும்?
ரெண்டுமே ரொம்ப பிடிக்கும், சைத்தானில் நான் சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்க நிறைய உதவி செய்தார்.
* பேய் பயம்..?
பயமா எனக்கா... இல்லவே, இல்லை. நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாத நான், ஒரே 'டேக்'ல நடிச்சேன்.
* டைட்டில் 'சாங்'
படத்தில் ஹீரோவுக்கு இணையாக என்னோட ஜெயலட்சுமி கேரக்டருக்கான பாட்டு இருக்கும்னு எதிர்பார்க்கல.
* தமிழ் படத்தில் கேரளா கேர்ள்ஸ் அதிகமாக சுத்துறாங்களே...
இப்பெல்லாம் தமிழில் மண் சார்ந்த படங்கள் அதிகம் எடுக்குறாங்க. அதுக்கு கேரள ஹீரோயின்கள் தான் பொருத்தமா இருக்காங்க...
* ஹீரோயின்களே 'ஐயிட்டம் சாங்'...
என்னை மாதிரி தென் இந்திய ஹீரோயின்கள் 'ஐயிட்டம் சாங்' ஆடுறதில்லை, ஆடினாலும், ரசிகர்களுக்கு பிடிக்காது.
* அருந்ததிக்காக ஒரு கேரக்டர்...
எனக்காக அப்படி ஒரு வாய்ப்பு வந்தா சந்தோஷமா நடிப்பேன். ஆனால், நாலு ஹீரோயின் சான்ஸ் எல்லாம் தேடி வருதே...
* கடவுள் பக்தி...
தினமும் 'ராம நாமம்' சொல்வேன், கஷ்டம் வந்தால் கடவுளை வேண்டிக்குவேன்; அது வந்த வழி தெரியாமல் காணாமல் போகும்.
* 'ஆல் டைம் மேக்கப்'பில் வலம் வருபவரா அருந்ததி?
ஷூட்டிங்ல மட்டும் தான் 'மேக்கப்', மற்ற நாட்களில் 'நோ மேக்கப்'.
* சினிமா ரசிகர்கள்...
ரசிகர்கள் பார்வை மாறணும். 'மீம்ஸ்' போட்டு கலாய்க்குறது வருத்தம்.
* நெக்ஸ்ட் ரிலீஸ்...
தமிழ், தெலுங்கில் '100 டிகிரி செல்சியஸ்' படம் ரீலீஸ். இயக்குனர் எழில் பாரதியின் 'பகல்' படத்தில் நடிக்கிறேன்.
* பொங்கல் ஸ்பெஷல்...
சர்க்கரை பொங்கலுக்காக 'ஐயாம் வெயிட்டிங்'...
ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்!


Post A Comment: