Propellerads

About

Navigation
Recent News

இளையதளபதியின் 'பைரவா' சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று பல மாதங்களுக்கு முன்பே நாம் தெரிவித்தவாறு வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் 'பைரவா' படத்தை பார்த்து இயக்குனர் பரதன் மற்றும் படக்குழுவினர்களை பாராட்டியதோடு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

மேலும் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் ஜனவரி 12 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய அட்டகாசமான போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஆக இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு 'பைரவா' பொங்கல் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: