Propellerads
Navigation

நண்டு நடிக்கும் படமும் வரப்போகிறது


முன்பெல்லாம் சினிமாவில் யானை, ஆடு, மாடு, குரங்கு, பாம்பு நாய் நடித்தது. இப்போது கற்பனை செய்ய முடியாத விலங்குகள் எல்லாம் நடிக்கிறது. மியாவ் என்ற படத்தில் பூனை நடிக்கிறது. ஒரு படத்தில் எலி நடிக்கிறது. கட்டப்பாவ காணோம் படத்தில் மீன் நடிக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு படத்தில் நண்டு நடிக்க இருக்கிறது. படத்தின் பெயர் நண்டு என் பிரண்டு.

இதில் ஸ்ரீகாந்த், ஓவியா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். அருணகிரி இசை அமைக்கிறார், நாகராஜன் தயாரிக்கிறார். ஆசாமி படத்தை இயக்கிய ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது: இது வித்தியாசமான திகில் படம். கடற்கரைக்கு அடிக்கடி செல்லும் ஹீரோயினுக்கு கடலில் இருந்து அடிக்கடி கரைக்கு வரும் ஒரு நண்டு பிரண்டாகிறது. நண்டை தினமும் சென்று பார்த்து அதனுடன் பழகி வருகிறாள். காலப்போக்கில் நண்டு ஹீரோயின் செல்லப்பிள்ளையாகிறது. கதாநாயகிக்கு சில பிரச்சினைகள் வந்து சேர்கிறது. அதை தனது பிரண்டான நண்டுவிடம் கூறுகிறாள். அந்த நண்டு அவள் பிரச்சினையை தீர்த்து வைக்கிறது. அது எப்படி என்பதுதான் படம்.

நண்டு கேரக்டரை கிராபிக்சில் உருவாக்கினாலும், நிஜ நண்டும் படத்தில் நடிக்கிறது. புதுச்சேரி, காரைக்கால், சென்னை கடற்கரையில் படப்பிடிப்பு நடக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நண்டு கொடுக்கும். என்கிறார் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ்.
Share
Banner

Post A Comment: